மண்டைதீவில் நீரில் மூழ்கி சிறுவர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர் என ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் இன்று (21) மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மண்டைதீவைச் சேர்ந்த சாவிதன் (வயது-7) சார்வின் (வயது -5) ஆகிய இருவருமே கிணற்றில் தவறி வீழ்ந்து உயிரிழந்துள்ளனர் என யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
சடலங்கள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
COMMENTS