ஆளுங்கட்சியுடன் இணையுமாறு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகாவுக்கு அழைப்பு விடுத்தார் இராஜங்க அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சரத்பொன்சேகா முக்கியமான நபர், அவரை நாம் மதிக்கின்றோம்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” சரத்பொன்சேகா முக்கியமான நபர், அவரை நாம் மதிக்கின்றோம்.
இராணுவத்தளபதியாக இருந்தபோது கம்பீரமாக இருந்தார். இன்று அந்தபக்கம்சென்று பலவீனமடைந்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியின்போது அவர் பாதுகாப்பு அமைச்சை
எதிர்ப்பார்த்தார். ஆனால் அவருக்கு வனஜீவராசிகள் அமைச்சு பதவியே வழங்கப்பட்டது. நிதிகூட உரியவகையில் ஒதுக்கப்படவில்லை.
எனவே, எங்கள் பக்கம் வாருங்கள், உங்களை மதிக்கின்றோம். ” – என்றார்.
அத்துடன், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் ஐக்கிய தேசியக்கட்சியினரை நம்பி இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டினார்.

COMMENTS