haiiii

Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு

நவம்பர் 26, 2020 முதல் டிசம்பர் 17, 2020 வரை இடம்பெறவுள்ள Lanka Premier League (LPL) சுற்றுப் போட்டிகளில் விளையாடும் Jaffna Stallions அணியில் ஆறு திறமை வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் இணையவுள்ளார்கள்.

Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்கள்:
Shoaib Malik (Pakistan),
Usman Shinwari (Pakistan),
Kyle Abbott (South Africa),
Duanne Olivier (South Africa),
Ravi Bopara (England),
Tom Moores (England) இந்த ஆறு விளையாட்டு வீரர்களின் கடந்தகால பெறுபேறுகளையும் அவர்களது திறமைகளையும் கவனமான ஆராய்ந்த Jaffna Stallions அணியினர், அவர்களைத் தமது அணியில் உள்வாங்கியுள்ளார்கள்.

Shoaib Malik
பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான (2007-09) Shoaib Malik ஒரு சகலதுறை ஆட்ட வீரராவார். வலது கை துடுப்பாட்ட வீரரான Shoaib Malik, வலது கை off break பந்து வீச்சாளருமாவார். Pakistan Super League (PSL) போட்டிகளில் Peshawar Zalmi அணிக்கு விளையாடி வருகிறார்.

2007ம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற முதலாவது T20 உலகக் கோப்பையின் இறுதியாட்டத்திற்கு பாக்கிஸ்தான் அணியை வழிநடத்தியதன் மூலம் Shoaib Malik சர்வதேசக் கவனத்தை ஈர்த்திருந்தார். 2009ல் இங்கிலாந்தில் இடம்பெற்ற T20 உலகக் கோப்பையை வென்ற பாக்கிஸ்தான் அணியில் Shoaib Malik முக்கிய பங்காற்றியிருந்தார்.

இதுவரை 116 சர்வதேச T20 கிரிக்கெட் போட்டிகளில் ஆடி 2,335 ஓட்டங்களைக் குவித்திருக்கும் Shoaib Malikன் உள்ளடக்கம், Jaffna Stallions அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும்.

Ravi Bopara
இங்கிலாந்து சர்வதேச கிரிக்கெட் அணிக்கு விளையாடிய அனுபவமுள்ள Ravi Bopara, தற்பொழுது Sussex county அணிக்கு விளையாடி வருகிறார். Ravi Bopara, Pakistan Premier League(PPL)இல் Karachi Kings அணிக்காகவும், Indian Premier League (IPL) போட்டிகளில் Kings XI Punjab அணியை பிரதிநிதித்துவம் செய்தும், Big Bash League (BBL) போட்டிகளில் Sydney Sixersஐயும், Bangladesh Premier League (BPL) போட்டிகளில் Chittagong Vikings அணியை பிரதிநிதித்துவம் செய்தும் சர்வதேச T20 சுற்றுப்போட்டிகளில் ஆடிய அனுபவசாலி ஆவார்.

வலதுகை துடுப்பாட்ட வீரரான Ravi Bopara, துடுப்பாட்ட வரிசையில் எங்கும் ஆடும் வல்லமையுள்ள ஆட்டக்காரர். அத்துடன் அவரது மிதவேக துல்லியமான பந்து வீச்சும் அவரை ஒரு சிறந்த சகலதுறை ஆட்டக்காரராக திகழ வைத்துள்ளது. Jaffna Stallions அணியில் Ravi Bopara முக்கிய பங்கு வகிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Kyle Abbott
தென்னாபிரிக்க சர்வதேச கிரிக்கெட் அணிக்கு ஆடிய Kyle Abbott ஒரு வேகப் பந்து வீச்சாளர். 2019ல் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை ஆட்டங்களில் தென்னாபிரிக்க அணியின் நட்சத்திர பந்து வீச்சாளராக Kyle Abbott திகழ்ந்தார். தென்னாபிரிக்க உள்ளூர் சுற்றுத்தொடரில் KwaZulu-Natal அணிக்காகவும், IPL போட்டிகளில் Chennai Super Kings மற்றும் Kings XI Punjab அணிகளுக்காகவும், PPL போட்டிகளில் Lahore Qalandars அணிக்கும் ஆடி சர்வதேச T20 சுற்றுப்போட்டிகளில் அனுபவசாலியாகத் திகழ்கிறார், Kyle Abbott.

Kyle Abbott அனுபவமிக்க வேகப் பந்து வீச்சு, LPL போட்டிகளில் ஆடும் பிற அணிகளிற்கு சவாலாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Usman Shinwari
பாக்கிஸ்தான் தேசிய கிரிக்கெட் அணியின் இடதுகை வேகப் பந்துவீச்சாளரான Usman Shinwari, Jaffna Stallions அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களில் ஓருவராக கருதப்படுகிறார்.

Duanne Olivier
தென்னாபிரிக்க தேசிய கிரிக்கெட் அணிக்கு ஆடிய அனுபவமுள்ள வலதுகை வேகப் பந்துவீச்சாளரான Duanne Oliver, Jaffna Stallions அணியின் பந்து வீச்சு வலிமைக்கு பேலும் பலம் சேர்க்கும் இன்னுமொரு சர்வதேச கிரிக்கெட் வீரர் ஆவார்.

Tom Moores
இங்கிலாந்து தேசிய U19 அணி, Lancashire, PPL போட்டிகளில் Multan Sultan அணிகளிற்கு ஆடிய அனுபவமுள்ள இளைய இடதுகை துடுப்பாட்டக்காரரும் விக்கெட் காப்பாளருமான Tom Moores, Jaffna Stallions அணியின் பிரதான விக்கெட் காப்பாளராக விளங்குவார்.

Jaffna Stallions
Jaffna Stallions என்பது இலங்கையில் இடம்பெறும் Lanka Premier League (LPL) போட்டிகளில் கலந்து கொள்ளும் ஒரு உரிமைத்துவ (Franchise) கிரிக்கெட் அணி. Jaffna Stallions அணியின் உரிமையாளர்களாக, இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து UK, Canada, Australiaவில் வதியும் 12 கிரிக்கெட் ஆர்வலர்கள் விளங்குகிறார்கள்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6725,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,21,உள்நாட்டு செய்திகள்,15104,கட்டுரைகள்,1538,கவிதைகள்,71,சினிமா,335,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3841,விளையாட்டு,781,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2807,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு
Jaffna Stallions அணியின் சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் விபரங்கள் அறிவிப்பு
https://1.bp.blogspot.com/-WebKghzjtTk/X7QL9s1qZVI/AAAAAAABqVU/NgEuhQSnk6UuPtyAh6sVPuOdt3bCalPZACLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-WebKghzjtTk/X7QL9s1qZVI/AAAAAAABqVU/NgEuhQSnk6UuPtyAh6sVPuOdt3bCalPZACLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/lpl.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/lpl.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy