2020ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த வருடம் ஜனவரி மாதம், குறிப்பிடப்பட்ட தினத்தில் நடத்துவதா, இல்லையா? என்பது குறித்து இன்னும் 10 நாள்களில் தீர்மானிக்கப்படுமென, கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இன்று (26) அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அதாவது மேல் மாகாணம் உள்ளிட்ட பாடசாலைகள் மூடப்பட்டுள்ள பிரதேசங்களில் டிசெம்பர் முதல் வாரம் அல்லது இன்னும் 10 நாள்களில் பாடசாலைகளை மீள திறப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்படாவிட்டால் சாதாரண தரப்பரீட்சையின் திகதிகளில் மாற்றம் செய்ய நேரிடும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
COMMENTS