கொழும்பு மாவட்டத்தில் நேற்று மட்டும் 262 கொரோனா நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
புதுக்கடை மற்றும் மட்டக்குளி ஆகிய பிரதேசங்களில் மட்டும் 42 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக கோவிட் தடுப்பு தொடர்பான தேசிய பணியகம் தெரிவிக்கின்றது.
கிராண்ட்பாஸ் பகுதியில் 39 பேரும், கொம்பனித்தெருவில் 31 பேரும், கிருலப்பனையில் 28 பேரும், வெள்ளவத்தையில் 23 பேரும் இவ்வாறு அடையாளம் காணப்பட்டவர்களில் இருக்கின்றனர்.
இதேவேளை பி.சி.ஆர் பரிசோதனையை மறுப்பவர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் வழக்கு தொடரவும் முடியும் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
COMMENTS