கொரோனா தொற்றின் முதலாவது தாக்கத்தை சிறப்பாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் ஊடகங்களும் மக்களும் அக்கறையின்றி செயற்பட்டமையினால்தான் இரண்டாவது அலை ஏற்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவிக்கின்றார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் கோவிட்-19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணியை சந்தித்தபோது ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவித்தபோது, கொரோனா வைரஸ் என்பது சுகாதார அச்சுறுத்தலாகும். அதில் மக்களை பாதுகாப்பு வழிநடத்துவது அரசின் பொறுப்பு. இந்த நாட்டு சுகாதாரக் கட்டமைப்புக்கு அதனை சிறப்பாக கையாள முடியும் என நம்புவதாக ஜனாதிபதி கூறினார்.
‘மிக சுலபமான விடயம் நாட்டை முடக்குவதாகும். ஆனாலும் மக்களின் அன்றாக ஜீவநோபாயம் பாதிக்கப்படும் என்பதால் அதனை செய்யவில்லை. முதலில் சிறப்பாக கொரோனா வைரஸினை ஒழித்துக்கட்டினோம்.
ஆனால் ஊடகங்களும் மக்களும் தங்களது கடமையை சரிவர செய்யவில்லை.
இதனால் இன்னுமொரு சவால் ஏற்பட்டுவிட்டது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மூடப்பட்ட பகுதியிலிருந்தும் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். ஆகவே நாட்டை மூடுவது தீர்வாக அமையாது’ என ஜனாதிபதி குறிப்பிட்டார்.
COMMENTS