- ஐ.எம்.மிதுன் கான்
நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்குஆதரவளித்தோம் - பா.உ.இஷாக் ரஹுமான்
நாட்டில் ஐக்கியத்தையும், ஒற்றுமையையும், அபிவிருத்திகளையும் உண்டுபன்னவே 20 மற்றும் பட்ஜெட் இற்குஆதரவாக வாக்களித்தோம் என அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் தெரிவித்தார்.
கிராமிய வீதி மற்றும் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சினால் அனுராதபுர மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட 49 மில்லியன் ரூபாய் நிதியின் கீழ்கெக்கிராவ கைலபொத்தான சந்தி தொடக்கம் குடி நீர் தாங்கி ஊடக நிதிகம ஊர் மத்தி வரையிலான சுமார் 2.9 கிலோமீட்டர் பாதையினை கார்பட் இட்டு புணர் நிர்மானம் செய்வதற்கான வேலைகள் பாராளுமன்ற உறுப்பினர்இஷாக் ரஹுமான் அவர்களினால் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில்கலந்துகொண்டு உரையாற்றும் பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
20 ஆவது சீர் திருத்தம் என்பது JR.ஜெயவர்த்தன உடைய காலத்தில் போன்று ஜனாதிபதிக்கு சுதந்திரமாக தனதுகடமைகளை செய்வதற்கு வாய்ப்பினை ஏற்படுத்திக்கொடுத்த ஒரு திருத்தமாகும். கடந்த காலங்களில்நாட்டினை அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்லும்போது முன்னாள் ஜனாதிபதிக்கு ஏற்பட்ட அழுத்தங்கள், இடர்கள் குறித்து நாம் அனைவரும் நன்கறிவோம்.
இத்திருத்தத்தின் பின்னர் எமது நாட்டின்அபிவிருத்திபாதையில் ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச அவர்களினால் மேற்கொள்ளப்படும் புரட்சிக்கு எந்தசக்திகளாலும் இடையூறு விளைவிக்க முடியாது என்பதனால் எம்மால் ஓர் வளர்ச்சிடைந்த இலங்கையினைஎதிர்காலத்தில் பார்க்க முடியும்.
இறைவனின் ஏற்பாட்டிற்கு அமைய ஜனாதிபதி கோட்டாபாய அவர்களின் தலைமையில் இலங்கை நாட்டின்ஆட்சி அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆட்சியாளருக்கு ஆதராவாகவும் பக்க பலமாகவும் இருக்கும்பொழுது தான்முழு நாட்டையும் நமது மாவட்டத்தையும் அபிவிருத்திப்பாதையில் இட்டுச்செல்ல முடியும் என்பதனை யாரும்மறுக்க முடியாது. கடந்தகால சம்பவங்கள் இதற்கு சான்றாக இருக்கின்றன.
குறிப்பாக நான் ஒரு சிறுபான்மைஇனத்தை சேர்ந்த அரசியல்வாதி என்பதனால் இச்சந்தர்ப்பத்தில் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயல்படுவதேநாட்டில் ஐக்கியத்தையும் ஒற்றுமையினையும் கிராம மட்டங்களிலான அபிவிருத்திகளையும் ஏற்படுத்துவதற்குதுணையாக இருக்கும் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அவர்களோடு ஸ்ரீலங்கா பொது ஜன பெரமுனவின்கெக்கிராவ தொகுதி அமைப்பாளர் வீரசேன கமகே, மரதங்கடவள வீதியமைப்பு அதிகாரசபையின் நிர்வாகபொறியியலாளர் சுஜித் மிரண்டா மற்றும் பிரதேச அரசியல் பிரமுகர்கள் உற்பட ஊர்வாசிகள் பலரும்கலந்துகொண்டிருந்தனர்.
COMMENTS