ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை அக்கட்சியின் தலைவரான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மீண்டும் நிராகரித்துள்ளார்.
கட்சியின் மத்திய செயற்குழு இன்று முற்பகல் சிறிகொத்தவில் கூடியது.
இதன்போது கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக, கட்சிக்குக் கிடைத்த ஒரேயொரு தேசியப்பட்டியல் பதவியை தலைவருக்கே வழங்குவோம் என்று தெரிவித்துள்ளனர்.
எனினும் அதனை ஏற்றுக்கொள்ள ரணில் விக்கிரமசிங்க மறுப்பு வெளியிட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்சியின் இளைய உறுப்பினர் ஒருவருக்கு அதனை வழங்க ஆலோசனை நடத்தும்படியும் அவர் அறிவுறுத்தியிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்பட்டியல் வெற்றிட நெருக்கடி மேலும் இழுபறி நிலையை சந்தித்துள்ளது.
COMMENTS