பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கோட்டை நீதவான் நீதிமன்றில் அவர் இன்று (13) ஆஜர் படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தல் சமயத்தில் இடம்பெயர்ந்த நபர்களை வாக்களிப்பதற்காக புத்தளத்தில் இருந்து மன்னாருக்கு இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை பயன்படுத்தி அழைத்துச் சென்றதாக ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதன்படி, கடந்த 19 ஆம் திகதி தெஹிவளை பிரதேசத்தில் வைத்து குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS