- விசேட செய்திப்பிரிவு சப்ராஸ் ✍️
அரசியல் வரலாற்றில் தனக்கேன்று ஒரு தனியிடத்தை பிடித்துள்ள முன்னாள் அமைச்சர், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் கைது மனவேதனையாக உள்ளது.
குறிப்பாக சிறுபான்மை சமூகத்திற்காக பாராளுமன்றத்தில் மிகவும் தைரியமாகவும் எதார்த்தமான உண்மைகளையும் நேரம் பார்த்து பேசக்கூடியவர். நேர்த்தியான பேச்சாற்றல் கொண்டவர்.
தனது வாழ்கையே அரசியலாக்கி சுமார் 30 வருடங்கள் மக்களுக்காக இரவுபகல் பாராமல் சேவைகளையும் அபிவிருத்திகளையும் முகம் சுளிக்காது செய்து வந்தே தலைவரே இன்று இடம்பெயர்ந்து மக்களுக்காக சிறைவாசம் சென்றிருக்கிறார்.
சிறையிலே இருந்தாலும் ஸ்கைப் தொழில்நுட்ப உதவியுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஸ்தாபகர் மர்ஹும் அஷ்ரபை எவ்வாறு முஸ்லிம் சமூகம் இழந்து தவித்ததோ அதே போல் ஒரு நிலைமையை மீண்டும் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்படவுள்ளது.
நாமல் குமார என்ற ஒருவர் ரிஷாட் பதியுதீனை கொலை செய்ய திட்டம்திட்டப்பட்டதாக பிரபல ஊடவியலாளர் ஒருடன் இடம்பெற்ற நேர்காணலில் அவர் தெரிவித்துள்ளார் இந்த விடம் நேற்றையதினம் பாராளுமன்றத்தில் நளின் பண்டார கடுமையாக பேசியிருந்தார் உடனடி விசாரணை செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.
COMMENTS