haiiii

தனிமைப்படுத்தல் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்

- நூருல் ஹுதா உமர்

"தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம் -    அக்கரைப்பற்று மேயர் மற்றும் தவிசாளர் கூட்டாக அறிவிப்பு 

"தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம். அதனால் முடியுமானவரை எல்லோரும் வீட்டிலேயே தங்கி இருக்க கேட்கப்படுகின்றீர்கள். முக்கியமாக ,வியாபார நிலையங்கள் , விவசாய நிலங்களுக்கு செல்லுதல் , வீதிகளில் நடமாடுதல் என்பவற்றை முற்றிலுமாக எமது மக்களின் நலனுக்காக சில தினங்கள் தவிர்ந்து இருங்கள் என்று வினயமாக கேட்கின்றேன். 

தனிமைப்படுத்தல் சட்டம் கடுமையாக நடைமுறை படுத்தபட இருப்பதால் வீணான அசெளகரிகத்தை தவிருங்கள். விரைவில் உங்களின் அன்றாட தேவைகளை கடந்த காலத்தைப்போல் உங்களின் காலடியில் கொண்டுவர ஏற்பாடுகள் நடைபெறுகின்றது ஆதலால் பொறுமையுடன் காத்திருங்கள் என அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி மற்றும் அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.றாசிக் ஆகியோர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

அக்கரைப்பற்றில் சமகாலத்தில் ஏற்பட்டுள்ள கொரோனா அசாதாரண சூழ்நிலையை அடுத்து அவர்கள்  விடுத்துள்ள விசேட அறிக்கையிலையே அவர்கள் இதனை கேட்டுக்கொண்டுள்ளார்கள். மேலும் அந்த அறிக்கையில்,

அக்கரைப்பற்று பிரதேசத்தில் கடந்த சில தினங்களில் கண்டறியப்பட்ட கோவிட் -19 தொற்றாளர்களின் எண்ணிக்கையானது எம் எல்லோரையும் ஒரு கணம் ஆட்டம் காண வைத்துள்ளது. அத்துடன் ,அதனை தொடர்ந்து நடத்தப்பட்ட பீ .சி.ஆர் பரிசோதனைகளின் முடிவுகளும் கவலை தருபவையாக இருந்தது .மேலும் இன்னும் முடிவுகள் எதிர்வரும் நாட்களில் கிடைக்க இருக்கின்றது .

இந்த நிலையில் நாம் எல்லோரும் தூர நோக்கோடும் , சாதூர்யமாகவும் , அர்பணிப்புடனும் நடந்து கொள்வதனால் மாத்திரமே இந்த சூழ்நிலையை வெற்றி கொள்ளலாம் என்ற அடிப்படையில் நேற்று சனிக்கிழமை (28) நடைபெற்ற பொறுப்பு வாய்ந்த துறைசார் உத்தியோகத்தர்களுடனான கூட்டத்தில்"தனிமைப்படுத்தல் சட்டத்தை" எமது பிரதேசத்தில் இன்னும் சில தினங்களுக்கு இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்.

இத் தீர்மானமானது எமது மக்களின் நன்மையை கருத்தில் கொண்டே எடுக்கப்பட்டது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகையால் இந்த ஆபத்தான நிலைமையின் அளவை எங்களால் அறிந்து கொள்ள ஒரு அவகாசமாக குறுகிய சில நாட்களின் தேவை இருப்பதால் பொறுமையுடனும் , அர்பணிப்புடனும் நாம் எல்லோரும் அதனை ஏற்று நடந்து கொள்ள கேட்கின்றோம். மருந்தகங்கள் கூட ஒரு பிரதேசத்தில் ஒன்றுதான் திறந்திருக்கும்.

மேலும் திண்மக்கழிவு அகற்றும் நடவடிக்கைகள் கிரமமாக தொடரும். ஆனால் உங்களின் வீட்டு கழிவுகளை முறையாக பொதி செய்து  அதை ஏற்றிச்செல்ல வரும் வாகனத்தில் கொண்டு சேர்க்கும் பொறுப்பை சிரமம் பாராது ஏற்றுக்கொள்ள கேட்கின்றோம். எனவே இந்த அசாதாரண சூழ்நிலையை உங்களின் ஒத்துழைப்புடன் வெற்றி கொள்ள எல்லோரும் கருமமாற்ற முன்வர வேண்டும் எனக் கேட்டு, உங்கள் எல்லோருக்காகவும் பிரார்த்திக்கின்றோம் என தெரிவித்துள்ளனர். 

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6770,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15720,கட்டுரைகள்,1548,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3903,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: தனிமைப்படுத்தல் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்
தனிமைப்படுத்தல் சட்டத்தை இறுக்கமாக கடைப்பிடிக்க தீர்மானித்துள்ளோம்
https://1.bp.blogspot.com/-btFlMF1532A/X8NLUscr7aI/AAAAAAABq5c/_Dauk0igZbY_PfAN9l1PCta9-NcWyt1ugCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-btFlMF1532A/X8NLUscr7aI/AAAAAAABq5c/_Dauk0igZbY_PfAN9l1PCta9-NcWyt1ugCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/11/request.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/11/request.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy