திருகோணமலை உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உயரமான காணி ஒன்றில் நிர்மாணிக்கப்பட்ட மதில் இடிந்து விழுந்ததில் சிறுவனொருவன் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிக்கிச்சை பெற்று வந்த நிலையில் கிசிச்சை பலனின்றி இன்று (29) உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை - புளியங்குளம் - தேவ நகர் பகுதியைச் சேர்ந்த தனேந்திரன் அர்ஜுன் (10 வயது) சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவனின் வீட்டுக்கு அருகில் உயரமான காணியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மதில் காற்றுடன் கூடிய கடும் மழை காரணமாக வெள்ளிக்கிழமை (27) இரவு இடிந்து விழுந்த நிலையில் சிறுவன் சிக்குண்டதாவும், அயலவர்களின் உதவியுடன் அரை மணி நேரத்துக்குள் சிறுவனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
COMMENTS