தாய் ஒருவர் தனது 04 மகள்களுக்கும் நஞ்சு கொடுத்து தானும் நஞ்சு உட்கொண்ட சம்பவம் திருகோணமலையில் உப்புவெளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரி பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தல் 16 வயது விதுசிகா என்கிற மாணவி உயிரிழந்ததுடன் ஏனைய மகள்மார்களான 12 வயது வைஸ்வரி, 8 வயது ஐஸ்வரி, 2 வயது கதிரியா ஆகியோருடன் அவர்களது 31 வயது தாயாராகிய நிசாந்தன் நாகேஸ்வரியும் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கிளிநொச்சி பிரதேசத்தில் இவர்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், கணவர் திருகோணமலை ஆனந்தபுரி பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
இவர் கோவில் ஒன்றில் பணியாற்றி வருபவர். இந்நிலையில் உப்புவெளி பகுதியில் கோவில் ஒன்றின் நிர்மாணப் பணிகளுக்காக அவர் நீண்டநாட்களாக வீட்டிற்கு செல்லாமல் தங்கி வேலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாக அவரது மனைவி நஞ்சு உட்கொண்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

COMMENTS