20 ஆவது திருத்த சட்டத்தை நிறைவேற்றுவதற்காக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்துவப்படுத்தும் பங்காளி கட்சிகளின் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் அந்த கட்சிகளின் தலைவர்களிடம் விளக்கம் கோர ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளது.
அது குறித்து அடுத்த வாரம் எழுத்து மூலம் விளக்கம் கோரவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
மனோ கணேசன், ரிஷாட் பதியூதீன், ரவூப் ஹக்கீம் ஆகியோர் தலைவர்களாக செயற்படும் 3 அரசியல் கட்களின் 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் 20 ஆவது திருத்த சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
அதேநேரம் ஐக்கிய மக்கள் சக்தியினை பிரதிநிதித்து வப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினரான டயானா கமேகேவும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்த நிலையில் அவருக்கு எதிராக ஏற்கனவே ஒழுக்காற்று நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, 20 ஆவது திருத்த சட்டத்த்திற்கு ஆதரவாக வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தியின் 8 பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆசனங்களை மாற்றுமாறு ஐக்கிய மக்கள் சக்தி இதற்கு முன்னர் அறிவித்திருந்தது.
இதற்கமைய அவர்களுக்கான ஆசன ஒதுக்கம் தொடர்பிலான இறுதி தீர்மானம் நாளை கூடவுள்ள பாராளுமன்ற தெரிவுக்குழுவில் மேற்கொள்ளப்படவுள்ளது.
COMMENTS