இலங்கையில் மேலும் 243 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் கொரோனா தொற்றாளர்களுடன் நெருங்கிப் பழகியவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை இன்றையதினம் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 316 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் 12,903 பேர் இதுவரை பூரணமாக குணமடைந்துள்ளனர்.
மேலும், 69 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS