முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த இலங்கை அரசுக்கு முஸ்லிம் சமூகம் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகள்.
கடந்த மார்ச் மாதம் இலங்கையில் கொவிட் 19 தொற்று பரவ ஆரம்பித்தது முதல் அதன் தாக்கத்தால் உயிரிழக்கும் உடல்களுக்கு அவரவர் சமய அனுஷ்டான முறைப்படி இறுதிக் கிரியையை நிறைவேற்றுவதற்கான அனுமதி மறுக்கப்பட்டு எரிக்கப்படும் நடைமுறையே காணப்பட்டது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலை என்று வர்ணிக்கப்படும் தற்போதைய சூழலிலும் அதே நடைமுறை பின்பற்றப்பபட்டது.
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) தன்னுடைய அறிக்கையில் கொரோனாவினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்யவும் செய்யலாம் அல்லது எரிக்கவும் செய்யலாம் என்ற இரு விதமான வழிகாட்டல்களையும் கூறியிருந்தது.
அதேபோல் வளர்ந்த நாடுகளான ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகள் மட்டுமல்லாது நமது அண்டை நாடுகளான தெற்காசிய நாடுகளில் கூட உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டலுக்கு அமைவாக கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை அடக்கம் செய்வதற்கான அனுமதியினை வழங்கியிருந்தும் நமது நாட்டில் அடக்கம் செய்வதற்கான அனுமதி தொடர்ந்தும் மறுக்கப்பட்டே வந்தது.
இந்த விடயம் ஏனைய சமூகத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியதோ இல்லையோ இந்த நாட்டின் குடிமக்களாகிய முஸ்லிம் சமூகத்திற்கு கொரோனா தொற்றின் அபாயத்தை விட மிகப்பெரும் சவாலாகவே தொடர்ந்தும் இருந்து வந்தது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் உடல்களை எரிக்கும் நடைமுறையை மாற்றி முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய வேண்டும் என்பதற்காக, இஸ்லாமிய சமூகத்தை சார்ந்த அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக அமைப்புகள், புத்திஜீவிகள், மற்றும் சிவில் சமூகம் என்று பலரும் தமது சார்பாக தத்தமது சக்திக்கு உட்பட்ட வகையில் அரசிடம் வேண்டுகோள் விடுத்து அரசுக்கு இது விடயத்தில் தொடர்ந்தும் கோரிக்கை வைத்து வந்ததை அனைவரும் அறிவோம். இந்த வேளையில் முஸ்லிம்களின் உணர்வுகளையும், முஸ்லிம்களால் வைக்கப்பட்ட கோரிக்கையின் நியாயத்தையும் உணர்ந்து இன்று திகதி(09/11/2020) முஸ்லிம்களின் உடலை அடக்கம் செய்யய அனுமதி தந்திருப்பது முஸ்லிம் சமூகத்துக்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்துள்ளது.
அல்ஹம்துலில்லாஹ்!
முஸ்லிம்களின் முயற்சி வீன் போகவில்லை. எம் சமூகத்தின் ஒவ்வொருவராது துஆ பிரார்த்தனையின் வெளிப்பாடாக இறைவன் எனக்கு இந்த உரிமையை பெற்றுத்தந்துள்ளான்.
இந்த வேளையில் நமது உரிமையை பெற்றுக் கொள்வதற்காக ஜனநாயக வழியில் பாடுபட்ட இலங்கை வாழ் இஸ்லாமிய சமூகத்தின் அரசியல் கட்சிகள், அரசியல் தலைவர்கள், ஆன்மீக அமைப்புகள், புத்திஜீவிகள் மற்றும் சிவில் சமூகம் என்று அனைவருக்கும் இறைவன் நிறப்பமான கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்பதுடன்,
எமது சமூகத்தின் உணர்வை புரிந்து கொண்டு சமூகத்தின் உணர்வுக்கு மதிப்பளித்து அடக்கம் செய்வதற்கான அனுமதியினை வழங்கிய இலங்கை அரசின் அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும், நீதி அமைச்சர் அலி சப்ரி அவர்களுக்கும் மேலும் சுகாதார அமைச்சுக்கும் இலங்கை முஸ்லிம்கள் சார்பாக ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
இப்படிக்கு
S.K முஹம்மது ஷிஹான்
செயலாளர்
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்
COMMENTS