புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய நிபுணர்கள் அடங்கிய குழுவினரின் அலுவலகம் நீண்ட நாட்களாக மூடப்பட்டுள்ளமை குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இரட்டை பிராஜாவுரிமை நீக்கம் மற்றும் பல யோசனைகள் அடங்கிய அறிக்கை ஒன்றுடன் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுதந்திர முன்னணி கடந்த வாரம் குறித்த நிபுணர் குழு அலுவலகத்திற்கு விரைந்தது.
குறித்த அலுவலகம் கொழுப்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் உள்ளது.
எனினும் அங்கு பல தடவை சென்ற அமைச்சர் விமல் வீரவன்சவின் கட்சியினருக்கு ஏமாற்றமே எஞ்சியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடக செயலாளர் அணுருத்த பண்டார ரணவாரண இதனை தெரிவித்தார்.
கடந்த 20ஆவது திருத்த யோசனைக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டில் இருந்த அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களை அழைத்து பேசின ஜனாதிபதி கோட்டாபய ராஜாக்ஸ, வரும் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் இரட்டை பிரஜாவுரிமை விடயத்தை நீங்குவதாக உறுதியளித்தார்.
இதனை அடுத்தே மேற்படி அமைச்சர்கள், 20ஆவது திருத்தத்தை ஆதரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS