- எம்.ஜே.எம் பாரிஸ்
சமூக வலைதளமான யூ டியூப் தளம் இன்று அதிகாலையில் இயங்காததால் பயனாளர்கள் அவதிக்குள்ளாகினர். இலங்கையில் மட்டுமின்றி சர்வதேசயளவில் இந்தப் பிரச்னை நீடிப்பதாக, யூ டியூப் நிறுவனம் தெரிவித்தது.
மேலும், தொழில்நுட்ப கோளாறு தொடர்பாக நிபுணர் குழு ஆய்வு செய்து வருவதாகவும், விரைவில் இயல்பு நிலை திரும்பும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், 3 மணி நேர இடைவெளிக்குப் பிறகு காலை 7 மணியளவில் படிப்படியாக யூ டியூப் தளம் செயல்பட தொடங்கியுள்ளது.
COMMENTS