எதிர்வரும் 2021ம் ஆண்டில் கொரோனா தொற்றை முற்றாக ஒழிப்போம் என்று இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்தார்.
பாணந்துறை பிரதேசத்தில் இன்று நடந்த நிகழ்வொன்றில் உரையாற்றிய போது அவர் இவ்வாறு கூறினார்.
முழு நாட்டையும் முடக்காமல் பொருளாதார சந்தர்ப்பத்திற்கு மக்களுக்கு இடமாளிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் எதிர்வரும் ஜனவரி 17ம் திகதிக்கு பின்னர் விமான நிலையத்தை வழமைக்கு கொண்டுவர முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
COMMENTS