கொரோனா வைரஸ் அச்சநிலைமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 481 இலங்கையர்கள் நாடுதிரும்பியுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் 3 விசேட விமானங்களில் இன்று அதிகாலை நாடுதிரும்பியுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்
இதன்படி ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 44 பேரும் கட்டார் தோஹா நகரில் இருந்து 147 பேர் இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
குறித்த அனைவரும் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலைகளில் பி சி ஆர் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்காக சுற்றுலா ஹோட்டல்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே தொழில் நிமித்தம் பஹ்ரேன் சென்றிருந்த 290 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளனர்.
நாடு திரும்பியுள்ள குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி சி ஆர் பரிசோதனைக்கு தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
COMMENTS