பொலன்னறுவ - கொழும்பு பிரதான வீதியின் கதுறுவெல நகரில் இன்று (01) அதிகாலை 2.45 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் ரக வானம் ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் பொலன்னறுவ ஓனகம மற்றும் காலிங்கஎல பகுதிகளை சேர்ந்த 18 மற்றும் 17 வயதுடைய இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் டிப்பர் ரக வாகனத்தின் ஓட்டுனர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலன்னறுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
COMMENTS