- ரிஸா யூசுப்
கொரோனா தொற்றில் மரணிக்கும் உடல்களை உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) வழிகாட்டலுக்கு அமைவாக அடக்கம் செய்வதற்கு அனுமதிக்க கோரி நாடு முழுவதும் தொடர் போராட்டாங்கள் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் இன்று கண்டி மாவட்டம் அகுரனை நகரில் "கண்டி-மாத்தளை" பிரதான வீதியில் காலை 10:00 மணிக்கு ஸ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாஅத் மூலம் கவனயீர்ப்பு போராட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
குறித்த போராட்டத்தில் பிரதேச வாசிகள் பலர் கலந்து கொரோனாவில் மரணிக்கும் முஸ்லிம், கிறிஸ்தவ சகோதரர்களின் உடல்களை எரிக்காமல் அவர்வர் மத நம்பிக்கை அடிப்படையில் அடக்கம் செய்வதற்கு இலங்கை அரசு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி அமைதி வழிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜனாஸா அடக்கத்திற்கு அனுமதி வழங்குமாறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்திய வண்ணம் சுகாதார வழிகாட்டல்களை கடைபிடித்து போக்குவருத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது எதிர்ப்பை தெரிவித்தனர்.
ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் பற்றியும் அரசு அனுமதி வழங்கக் கோரியும் தமிழ், சிங்கள் மொழிகளில் ஆர்ப்பட்ட உரையுடன் இறைவம் அருளால் இந்த அமைதி வழிப்போராட்டம் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. அல்ஹம்துலில்லாஹ்!
COMMENTS