ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸிலிருந்து முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானா இராஜினாமா செய்துள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர், தனது இராஜினாமாக் கடிதத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவுப் ஹக்கீமுக்கும், அதன் பிரதியை கட்சியின் செயலாளர் நிசாம் காரியப்பருக்கும் அனுப்பி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படடுள்ளது.
கட்சிக்குள் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிரது.
COMMENTS