மாவனெல்லையில் ஹிங்குள்ள பிரதேசத்தில் புத்தர் சிலை மீது தாக்குதல் இனந்தெரியாதோர் கல்வீச்சு தாக்குதல் நடத்தி உள்ளதாக மாவனெல்லை பொலிஸார் தெரிவித்தனர்.
இதனால் புத்தர் சிலைக்கு முன்னால் இருந்த கண்ணாடிகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது.
இதுதவிர மாவனெல்லை அலுத்நுவர பிரதேசத்தில் மூன்று நாட்களுக்கு முன்னர் மற்றுமொரு புத்தர் சிலை மீது கல்வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் இது தொடர்பிலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக கூறப்பட்டது.
COMMENTS