பாணந்துறையிலுள்ள தனியார் வங்கி ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான தம்பதிகள் இருவர் குறித்த வங்கிக்கு சென்றுள்ளமை உறுதியாகியுள்ளதால், இன்று காலை தொடக்கம் வங்கியை மூடநடவடிக்கை எடுத்ததாக பாணந்துறை பொது சுகாதார பரிசோதகர் சம்பத் மொர முதலி தெரிவித்துள்ளார்.
அத்துடன், முகாமையாளர் உள்ளிட்ட அலுவலக சபையினரை அவர்களின் வீடுகளில் சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வாதுவ சுகாதார வைத்திய அதிகாரி பிரிவைச் சேர்ந்த குறித்த தம்பதிகள் , சில தினங்களுக்கு முன்னர் பிசிஆர் பரிசோதனை செய்துகொண்டதாகவும் இதன் அறிக்கை நேற்று கிடைத்த போது, அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்றுக்குள்ளான இருவரும் சென்று வந்த இடங்கள் குறித்து விசாரித்த போது, அவர்கள் இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வங்கிக்குச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
COMMENTS