வாடகை அடிப்படையில் கார் ஒன்றை பெற்று அதனை அடகுவைத்து மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை கைதுசெய்ய அநுராதபுரம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கண்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவரால் சிலாபம் பகுதியை சேர்ந்த நபரிடம் 70 ஆயிரம் மாதாந்த வாடகை அடிப்படையில் கார் ஒன்று பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், காரை வாடகைக்கு பெற்றவர் தலைமறைவாகியுள்ளதாக அநுராதபுரம் பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்ற நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதன்போது, சந்தே நபரின் குறித்த மோசடி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
சந்தேக நபரால் இவ்வாறு வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்ட மேலும் நான்கு கார்கள் அடகுவைக்கப்பட்டமையும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
சந்தேக நபர் மஹஇலுப்பள்ளம பகுதியை சேர்ந்த 52 வயதுடைய ஒருவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
COMMENTS