இலங்கையில் மேலும் 5 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதற்கமைய இதுவரை நாட்டில் 165 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர்.
01 - அகலவத்தை பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும்,
02 - மக்கொன பிரசேத்தை சேர்ந்த 86 வயதுடைய பெண் ஒருவரும்,
03 - கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும்,
04 - மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும்
05 - வதுபிடிவல பிரதேசத்தை சேர்ந்த 86 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
COMMENTS