இலங்கையில் மேலும் 4 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 199 ஆக அதிகரித்துள்ளது.
01 - மட்டக்களப்பு பிரதேசத்தை சேர்ந்த 72 வயதுடைய ஆண் ஒருவரும்
02 - கொழும்பு 10 பிரதேசத்தை சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவரும்
03 - கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய ஆண் ஒருவரும்
04 - கொழும்பு 15 பிரதேசத்தை சேர்ந்த 66 வயதுடைய ஆண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
இதேவேளை இன்றைய தினத்தில் மாத்திரம் 639 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
COMMENTS