ஜனவரி 11ஆம் திகதி 2021 மதியம் 2 மணிக்கு உலகளாவிய ரீதியில் சுவிட்சர்லாந் நாட்டின் ஜெனிவா நகரத்தில் மனித உரிமை ஆணைக்குழு முன்பாக நடத்த விருக்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் ஒன்றியத்தின் அனுசரணையில் ஐரோப்பா வாழ் இலங்கையர்கள் ஒன்றிணைந்து இலங்கையில் நடாத்தப்பட்டு வரும் மனித உரிமை மீறல் மற்றும் ஜனாஸா எரிப்பிட்கு எதிராக கண்டன போராட்டம்.
காளி/பேருவளை/ கண்டி/ திகன/ குருநாகல/ மினுவாங்கொடை போன்ற இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப் பட்ட இன வன்முறையின் போது ஆர்ப்பாட்டங்களை செய்த முன் அனுபவமுள்ள பலரும் ஒன்றிணைந்து இம்முறையும் இலங்கையில் தொடர்ந்து எரியூட்டப் பட்டு வரும் முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவ ஜனாஸா எரிப்புக்கு எதிராக கடல் கடந்து ஐரோப்பாவில் வாழும் சமூக நலன் விரும்பிகள் உலமாக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து நமது நாடு நமது சமூகம் நமது உரிமை என்ற தொனிப்பொருளில் ஐரோப்பிய இஸ்லாமிய தகவல் ஒன்றியத்தின் தலைவர் ஹனீப் முகம்மத் அவர்களின் வழி காட்டலில் நடத்தவிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு உங்கள் அனைவரையும் அன்புக் கரம் நீட்டி அழைக்கின்றோம்.
வாய் மூடி நிற்கும் சர்வ தேசத்திற்கும் மற்றும் இலங்கை அரசு மற்றும் சுகாதார பிரிவுக்கும் உணர்த்தும் வகையில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
முக்கிய குறிப்பு அந்நாட்டு சட்டதிட்டங்களை மதித்து உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டலுக்கு இணங்க இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளோம் என்பதனை அறியத் தருகின்றோம்.
மேலதிக விபரங்களுக்கு தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்.
0041 78 633 13 35
00 41 79 555 5354
ஏற்பாட்டுக் குழு
ஏற்பாட்டுக் குழு உறுப்பினர் கட்.
Firthous
Ameer
Rahman
Azwar
Ahsan
Sahabdeen
Azhar
Faisal
Ramlan
இவர்களின் ஏற்பாட்டில் நடத்த உள்ளோம் என்பதை அறியத்தருகின்றோம்.
ஊடக அனுசரணை உலகளாவிய ரின் ஊடக வலையமைப்பு.
ரின் டிவி என்றும் உங்கள் துன்பத்தின் பங்காளி.
COMMENTS