haiiii

தடுப்பூசி போட்டுக் கொண்டால் முதலையாக மாறலாம் - பெண்களுக்கு தாடியும் வளரலாம்

- எம்.ஜே.எம் பாரிஸ்

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டால் முதலையாக மாறலாம் - பெண்களுக்கு தாடியும் வளரலாம் - பிரேசில் ஜனாதிபதி அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதில் பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி நல்ல பலன் தருவது உறுதியானதால், பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி UK, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

கொரோனா வைரஸால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசிலும் ஒன்று. கொரோனா வைரஸால் நிகழும் உயிரிழப்புகளில் பிரேசில் உலகளவில் 2வது இடத்தில் இருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 873 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இறந்ததையடுத்து பிரேசிலில் கொரோனா வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185,650 ஆக உயர்ந்துள்ளதாக பிரேசிலின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

பிரேசிலில் அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படுமென்றும், அதேசமயம் தடுப்பூசி போட்டுக்கொள்வது கட்டாயமாக்கப்படாதென்றும் பிரேசிலின் ஜனாதிபதி ஜெயிர் போல்சனாரோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.

உலகையையே உலுக்கி வரும் கொரோனா வைரசை அது ஒரு சிறிய காய்ச்சல் தான் இதற்கு ஊரடங்கு, முகக்கவசம் அணியாமல், மக்கள் சுதந்திரமாக வெளியே வர வேண்டும் என பிரேசில் ஜனாதிபதி ஏற்கெனவே கூறியதால் உலக சுகாதார ஸ்தாபனத்தாலும் , ஏனைய அமைப்புக்ளாலும் கடும் விமர்சனத்துக்குள்ளானார்

முகக்கவசம் அணியாமல் பல்வேறு நிகழ்வில் பங்கேற்ற பிரேஸில் ஜனாதிபதிக்கு கடந்த July மாதம் 10ம் திகதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தனிமைப்படுத்திக் கொண்ட அவர் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையை தொடர்ந்து எடுத்துவந்தார்.

இதற்கிடையில், பைசர் தடுப்பூசியை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவருவது தொடர்பாக பிரேசில் அரசாங்கம் இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை. 

கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தாலும் அதை போட்டுக் கொள்ளப் போவதில்லையென்பது அது தனது தனிப்பட்ட உரிமை என பிரேசில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

பைசர் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தில் ( பிரேசில் அரசாங்கம் போட்டுள்ள ஒப்பந்தம் ) மிகவும் தெளிவாக உள்ளது. தடுப்பூசியால் ஏற்படும் பக்க விளைவுகளுக்கு நாங்கள் ( பிரேசில் அரசாங்கம் ) எந்த விதத்திலும் பொறுப்பாக முடியாது. நீங்கள் ஒரு முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சினை. நீங்கள் மனிதநேயமற்றவராக மாறினால், ஒரு பெண்ணுக்கு தாடி வளரத் தொடங்கினால் அவர்களுக்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இருக்காதென்று பிரேசில் ஜனாதிபதி மேற்கோள் காட்டி கூறியுள்ளார்.

இதனால் பிரேசில் நாட்டு மக்கள், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டு ஏதேனும் பக்க விளைவுகள் வந்துவிட்டால், என்ன செய்வது? கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாமா? வேண்டாமா? என்ற பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6760,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15643,கட்டுரைகள்,1546,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3899,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2821,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: தடுப்பூசி போட்டுக் கொண்டால் முதலையாக மாறலாம் - பெண்களுக்கு தாடியும் வளரலாம்
தடுப்பூசி போட்டுக் கொண்டால் முதலையாக மாறலாம் - பெண்களுக்கு தாடியும் வளரலாம்
https://1.bp.blogspot.com/-ff5gpO82SkM/X949dcb4Y3I/AAAAAAABr38/iKnAZkCKZow6u6koSlZVHHZD9cVGWcO8wCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-ff5gpO82SkM/X949dcb4Y3I/AAAAAAABr38/iKnAZkCKZow6u6koSlZVHHZD9cVGWcO8wCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/12/jair.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/12/jair.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy