- சர்ஜுன் லாபீர்
முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக நாட்டில் பல்வேறுபட்ட பிரதேசங்களில் பல போராட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இன்று (25) கல்முனை பிரதேசத்தில் கல்முனை மக்கள் வங்கிக்கு முன்பாக ஜக்கிய மக்கள் சக்தி கட்சியின் கல்முனைத்தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துர் ரஸ்ஸாக் தலைமையில் அமைதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர் MIM. அப்துல் மனாப் அவர்களும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் இளைஞர் அமைப்பாளர் அக்கில் ஹனீபா என பலர் கலந்துகொண்டனர்.
COMMENTS