ஓமானில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த 20 பேர் விமான நிலையத்தில் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்கு, தம்மிடம் பணம் இல்லை எனக் கூறியே, அவர்கள் இவ்வாறு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஓமானில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 54 பேர் இன்றைய தினம் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இந்த நிலையில், விமான நிலையத்தில் PCR பரிசோதனை மேற்கொள்வதற்காக அவர்களிடம் பணம் கோரப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, குறித்த 20 பேரும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக, விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், குறித்த பயணிகளின் கோரிக்கைக்கு அமைய, அவர்கள் விமான நிலையத்தின் பகுப்பாய்வுப் பிரிவுக்கு அனுப்பப்பட்டு, PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும், கட்டுநாயக்க விமான நிலையத்தில் PCR பரிசோனைகளைகளை மேற்கொள்வதற்கு, உரிய பணத்தை தயார்ப்படுத்த வேண்டும் என, அவர்களுக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டிருந்தாக, விமான நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவிக்கின்றார்.
COMMENTS