கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வெளியேற்றப் பிரிவில் வெளிநாடு செல்வர்களைப் பார்வையிட பொதுமக்களுக்கான பிரிவு நாளை முதல் மீண்டும் திறக்கப்படவுள்ளது.
இதற்கமைள இந்தப் பிரிவில் பயணியின் சார்பாக ஒருவருக்கே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விமான நிலையத்திற்கு வருகின்ற பயணிகள் மற்றும் வெளிச்செல்லல் பிரிவில் பிரவேசிப்பவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது.
COMMENTS