மன்னாரில் நிர்மாணிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் முதலாவது காற்றாலை மின் உற்பத்தி பூங்காவை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வைபவ ரீதியாக இன்று (08) திறந்து வைத்தார்.
மன்னார் - தலைமன்னார் பிரதான வீதி, நடுகுடா பகுதியில் இந்த மின் உற்பத்தி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
மின் சக்தி அமைச்சர் டளஸ் அழகப்பெரும, இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அமைச்சர் டக்கஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், கே.திலீபன், வட மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ், மன்னார் மாவட்டச் செயலாளர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டி மேல் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
COMMENTS