முகக்கவசம் அணியாமல் தனிமைப்படுத்தல் சட்டத்தை உதாசீனம் செய்த 9 பேருக்கு தலா 3000 ரூபாபடி தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் காலி மாவட்டத்தில் இடம்பெற்றிருக்கின்றது.
காலி – அபராதுவ பிரதேசத்தில் குறித்த சந்தேக நபர்கள் 9 பேரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் இன்று திங்கட்கிழமை காலி பிரதான நீதிமன்ற நீதவான் ஹர்ச கெக்குனுவல முன்பாக ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன்போது தலா 3000 ரூபாபடி 27000 ரூபா தண்டப்பணம் இவர்களிடத்திலிருந்து அறவிடுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
COMMENTS