haiiii

ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது எனது எட்டு வயது மகனின் கேள்வி ?

- நூருல் ஹுதா உமர்

ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது எனும் எனது எட்டு வயது மகனின் கேள்விக்கு விடையாகவே அடையாள நடைபவனியை ஆரம்பித்தோம் - கல்முனையில் போராட்டம் செய்த பௌஸ்

முஸ்லிம் ஜனாஸாக்களும்,குழந்தைகளும் எரிக்கப்பட்ட போது அந்த எரிப்பை நிறுத்த தன்னால் எதுவும் செய்ய முடியாதா ? எனும் எனது மகனின் கேள்விக்கு விடையாகவே கல்முனையை சேர்ந்த சாகுல் ஹமீட் முஹம்மட் பௌஸ் (வயது-50) ஆகிய நானும் என்னுடைய மகன் பௌஸ் முகம்மட் நுஹ்மானும் அடையாள நடைபவனியை ஆரம்பித்தோம். 

என ஜனாஸா எரிப்பிற்கு எதிராக மகனுடன் நடைபயணம் மேற்கொண்ட கல்முனை நபர் தனது நடைப்பயணம் இடைநடுவில் நிறுத்தப்பட்டமை குறித்து அம்பாறை ஊடக அமையத்தில் திங்கட்கிழமை (28) ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும் போது கூறினார்.

மேலும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

கொடூரமாக ஜனாஸாக்களை எரித்துவிட்டு பௌத்த மக்களின் மீது குற்றச்சாட்டினை முன்வைத்து இந்த அரசாங்கமானது ஏன் அரசியல் செய்கின்றது. மண்ணால் படைக்கப்பட்ட எம்மை மரணித்த பின்னர் இந்த மண்ணில் அடக்குவதற்கு ஜனாதிபதி அவர்கள் அனுமதி தர வேண்டும் எனும் கோரிக்கையை முன்வைத்தே கல்முனையில் இருந்து அக்கரைப்பற்று வரை கால்நடையாக அமைதி வழி போராட்டம் ஒன்றினை மேற்கொண்டிருந்தேன். ஆனால் கல்முனை நீதிவான் நீதிமன்றின் உத்தரவின் படி பொலிஸாரால் நிறுத்தப்பட்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் வரை சென்று தனது அமைதி வழி போராட்டத்தினை நடாத்தி முடித்தேன்.

ஜனாஸா எரிப்புக்கு எதிராக எனது எட்டு வயது மகனுடன் வெண் துணி கவனயீர்ப்பு நடைபவனி ஒன்றினை எரிக்கப்பட்ட ஜனாஸாக்களுக்கு ஜனாஸா தொழுகை நடத்தப்பட்டு துஆப் பிரார்த்தனைகளை நானும் மகனும் செய்த பின்னர் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீரிடம் மகஜர் ஒன்றினை மகனால் கையளிக்கப்பட்டு நடைபவனியை ஆரம்பித்தேன். இதனை செய்யக்கூடாது மீறி செய்தால் தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் உங்களை கைதுசெய்வோம் என்ற மிரட்டல்கள் வந்தது. வீட்டையும் சுற்றிவளைத்தனர் இப்படியான பல தடைகள் வந்தபோது என்னுடைய நண்பர்கள் எனக்கு பக்கபலமாக இருந்தனர்.

நடைபவனி போராட்டம் ஆரம்பித்த போது கல்முனை பொலிஸார் எங்களுக்கு நிபந்தனை விதித்து பாதுகாப்பு வழங்கினர். மக்கள் எங்களின் நடைபவனி போராட்டத்திற்கு ஆதரவு தரும் வகையில் பாதையில் இருபக்கமும் நின்றிருந்தனர். எங்களை கல்முனை நகர மண்டபத்தின் அருகில் நிறுத்தி நீதிமன்ற கட்டளை தரப்பட்டது. 

பின்னர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீனின் உதவியால் சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் ஜனாதிபதிக்கு அனுப்பும் மகஜரை கையளித்தோம். ஜனாதிபதி அவர்கள் எங்களின் போராட்டங்களை மதித்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்தார்.

COMMENTS

இச் செய்தி பற்றி உங்கள் கருத்து vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,20,video,8,அரசியல்,6769,இரங்கல் செய்தி,21,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,22,உள்நாட்டு செய்திகள்,15710,கட்டுரைகள்,1548,கவிதைகள்,71,சினிமா,338,நேர்காணல்,7,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,92,விசேட செய்திகள்,3903,விளையாட்டு,785,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2824,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,40,
ltr
item
Vanni Express News: ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது எனது எட்டு வயது மகனின் கேள்வி ?
ஏன் ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்றது எனது எட்டு வயது மகனின் கேள்வி ?
https://1.bp.blogspot.com/-RMvcmvnIOW8/X-rl_OtnPKI/AAAAAAABsRk/CNsyZnp8WbMI8r4hfdnwEccaWHGdQDCagCLcBGAsYHQ/w640-h368/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-RMvcmvnIOW8/X-rl_OtnPKI/AAAAAAABsRk/CNsyZnp8WbMI8r4hfdnwEccaWHGdQDCagCLcBGAsYHQ/s72-w640-c-h368/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/12/nuhman.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/12/nuhman.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy