கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பது குறித்து, இதுவரை எந்தவொரு தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் சடலங்களை புதைப்பது அல்லது தகனம் செய்வது குறித்து, அரசியல்வாதிகள் மற்றும் இணையத்தளங்கள் சில தவறான கருத்துக்களை வெளியிட்டு வருவதாக, அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மகா சங்கத்தினரும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துள்ள போதிலும், தாம் விசேட நிபுணர்களின் அறிக்கையின் பிரகாரேமே செயற்படுவதாக, சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மேலும் தெரிவித்துள்ளார்.
COMMENTS