- ஐ. ஏ. காதிர் கான்
எதிர்வரும் ஜனவரி மாத நடுப்பகுதியில், கட்டுநாயக்க உள்ளிட்ட நாட்டின் அனைத்து விமான நிலையங்களையும் உத்தியோகபூர்வமாகத் திறக்க எதிர்பார்த்துள்ளதாக, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
யுக்ரேன் நாட்டு சுற்றுலாப் பயணிகள் (28) நாட்டுக்கு வருகை தந்துள்ளமை தொடர்பில், ஊடகங்களுக்குக் கருத்துரைத்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்பிரகாரம், வணிக ரீதியிலான விமான சேவைகளை ஆரம்பிக்கத் தயாராக உள்ளோம்.
அத்துடன், சுற்றுலாப் பயணிகளுக்காக நாடு மீண்டும் திறக்கப்படுவதன் காரணமாக, புதிய கொரோனா கொத்தணி உருவாகும் என எவரும் அச்சப்பட வேண்டிய அவசியம் கிடையாது.
மேலும், சுற்றுலாப் பயணிகள் தங்கும் ஹோட்டல்களிலிருந்து அவர்கள் வெளியேறியதன் பின்னர், குறித்த ஹோட்டல் பணியாளர்கள் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்படுவார்கள்.
இதேவேளை, சுற்றுலாப் பயணிகளிடமிருந்து நாட்டு மக்களுக்கோ அல்லது நாட்டு மக்களிடம் இருந்து சுற்றுலாப் பயணிகளுக்கோ கொரோனாத் தொற்றுப் பரவல் ஏற்படாத வகையில் சிறப்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இது தவிர, ரஷ்ய சுற்றுலா வலயத்திலிருந்து 2,580 பயணிகள், விரைவில் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
COMMENTS