வவுனியாவில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான பெண் இன்று மாலை உயிரிழந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியைச் சேர்ந்த குறித்த பெண், காய்ச்சல் காரணமாக கடந்த புதன் கிழமை வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கி சிகிச்சை பெற்ற நிலையில் அவசர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டார்.
இந்நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட பி.சீ.ஆர் பரிசோதனையில் நேற்று கொவிட் 19 தொற்றுறுதியானது. இந்நிலையில் அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றியனுப்பட்டிருந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன் எமது செய்தி சேவைக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.
இதன்படி வட மாகாணத்தில் முதலாவது கொவிட் 19 மரணம் பதிவாகியுள்ளது. அத்துடன் மருதனார்மடம் கொத்தணியில் மேலும் 4 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி மருதனார்மடம் கொத்தணியில் கொவிட் 19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 109 ஆக உயர்வடைந்துள்ளது.

COMMENTS