மாகாண சபைத் தேர்தலை தற்போதைய சூழலில் நடத்தமுடியாது என்கிற முடிவில் அரசாங்கம் இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் முக்கியஸ்தர்களான இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அநரபிரியதர்சன யாப்பா தெரிவிக்கின்றனர்.
கொழும்பில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர்கள் இந்த கருத்தை வெளியிட்டார்கள்.
குறிப்பாக மாகாண சபைத் தேர்தல் குறித்த சட்டம் கடந்த ஆட்சியில் அநாவசியமான முறையில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பெற்று திருத்தப்பட்டுள்ளதால் அதனை மீண்டும் திருத்த பாராளுமன்ற பெரும்பான்மை அவசியம். அதற்கு சிறிதுகாலம் தேவைப்படும் என்று இராஜாங்க அமைச்சர் சட்டத்தரணி சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.
அதுவரை மாகாண சபைத் தேர்தலை புதிய மற்றும் பழைய முறையில் நடத்தமுடியாது என்றும் தெளிவுபடுத்தினார்.
COMMENTS