வவுனியா சுற்றுலா விடுதி திறப்பிற்காகச் சென்ற சட்ட மாஅதிபர் தப்புல டி லிவேரா உள்ளிட்ட திணைக்கள அதிகாரிகள் எவருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட மாஅதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி நிஷாரா ஜயரத்ன இதனை அறிவித்துள்ளார்.
அண்மையில், சட்ட மாஅதிபர் உட்பட ஒரு சில அதிகாரிகள் அடங்கிய குழுவினர், வவுனியாவில் சுற்றுல் பங்களா ஒன்றின் திறப்பு விழாவில் கலந்து கொண்டிருந்தனர். அதனைத் தொடர்ந்து குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட சட்டத்தரணி ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதி செய்யப்பட்டிருந்தது.
அதற்கமைய, சட்ட மாஅதிபர் உள்ளிட்ட அந்நிகழ்வில் கலந்துகொண்ட நபர்களுக்கு PCR சோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
COMMENTS