கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் இறுதிக் கிரியைகள் குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, மேலும் சில நாட்களில் ஒப்படைக்கப்படும் என தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவின் பிரதானி, விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தொற்றினால் உயிரிழக்கும் நபர்களின் உடல்களை, புதைப்பதற்கான சாத்தியப்பாடுகள் குறித்து ஆராய்வதற்காக குறித்த குழு நியமிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், விசேட நிபுணர்களினால் தயாரிக்கப்பட்ட விஞ்ஞானபூர்மான அறிக்கை மேலும் சில நாட்களில், சுகாதார அமைச்சின் செயலாளருக்கு ஒப்படைக்கப்படும் என விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
குறித்த குழு, சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

COMMENTS