கொழும்பில் நடிகர் விஜய்க்கு சொந்தமானது என கூறப்படும் காணியில் பிரச்சினை எழுந்துள்ளதாக கடந்த சில வாரங்களாகவே சமூக ஊடகங்களில் செய்திகள் பகிரப்பட்டு வந்தன.
எனினும், அந்த காணி விவகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் விஜய் தரப்பினர் பதிலளித்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள அறிக்கையில் எந்தவித உண்மை தன்மையும் கிடையாது என விஜய் தரப்பினர் பதிலளித்துள்ளனர்.
அத்துடன், வெளியாகியுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது எனவும் விஜய் தரப்பினர் தெரிவித்துள்ளதாக டைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள விஜய்க்கு சொந்தமான காணியொன்றை பெரும்பான்மை இனத்தவர்கள் கையகப்படுத்திக் கொள்ள முயற்சித்து வருவதாக தமிழகத்தின் முன்னணி ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.
இந்த செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சமூக வலைத்தளங்களும் செய்திகளை வெளியிட்டிருந்த பின்னணியிலேயே, இன்று இந்த செய்தி பொய்யானது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
COMMENTS