வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்கள் 251 பேர் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
பல்வேறு நாடுகளில் இருந்து 11 விசேட விமானங்கள் ஊடாக குறித்த இலங்கையர்கள் கடந்த 24 மணிநேரத்திற்குள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இன்று காலை 8.30 அளவில் நிறைவடைந்துள்ள 24 மணிநேர காலப்பகுதிக்குள் குறித்த பயணங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன் கட்டார் தோஹா நகரில் இருந்து 103 பேரும் அபுதாபியில் இருந்து 47 பேரும் இவ்வாறு நாடுதிரும்பியுள்ளனர்.
இதேவேளை குறித்த காலப்பகுதியில் சுமார் 387 இலங்கையர்கள் பல்வேறு தேவைகளின் நிமித்தம் வெளிநாடுகளுக்கு பயணித்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய கடமை நேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இதில் சுமார் 158 இலங்கையர்கள் தொழில் நிமித்தம் ஜப்பான் மற்றும் கட்டார் ஆகிய நாடுகளுக்கு பயணித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
COMMENTS