வெளிநாடுகளில் இருந்து மேலும் 434 பேர் இன்று (12) அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவர்களில் கட்டாரில் இருந்து 311 பேர் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய அரபு ராச்சியத்தில் இருந்து 46 பேரும் மாலைத்தீவில் இருந்து 76 பேரும் சீனாவில் இருந்து ஒருவரும் வந்துள்ளதாக கூறப்படுகின்றது.
இதேவேளை, ஐக்கிய அரபு ராச்சியம், துருக்கி, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து மேலும் 70 பேர் வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, முப்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 75 தனிமைப்படுத்தல் முகாம்களில் 6267 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொரோனா ஒழிப்பு மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.
COMMENTS