வீதியில் பயணித்துக் கொண்டிருந்த அதிசொகுசு கார் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தியன உயன பகுதியில் வீதியில் சென்றுக் கொண்டிருந்த தாய் மற்றும் மகளை மோதி தியவன்னா ஓயாவில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
நேற்றிரவு (28) குறித்த விபத்து இடம்பெற்றுள்ள நிலையில் விபத்து தொடர்பில் 21 வயதுடைய வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த விபத்தில் 35 வயதுடைய தாய் படுகாயடைந்துள்ள நிலையில் 10 வயது சிறுமி சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.
காயமடைந்த இருவரும் கலுபோவில் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்து குறித்து வெலிகட பொலிஸாரினால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
COMMENTS