தற்போதைய கொரோனா பிரச்சினை காரணமாகவும், மேலும் பல பிரச்சினைகள் குறித்தும் தற்போது முஸ்லிம்கள் மத்தியில் விரக்தி நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலைமை எனக்கு தெரிகிறது. இந்நிலையை நான் அனுபவிக்கிறேன்.
நான் பள்ளிவாயல்களுக்கு சென்றாலும், வைபவங்களுக்கு சென்றாலும் முஸ்லிம்கள் விரக்தியடைந்துள்ளதை என்னால் காண முடிகின்றது என நீதி அமைச்சர் அலி சப்ரி தனியார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதிக்கு 69 லட்சம் வாக்குகள் கிடைத்திருந்தாலும் அந்த வாக்குகள் அனைத்தும் முழுமையான சிங்கள பௌத்தர்களுடையது அல்ல. சுமார் 60 லட்சம் வாக்குகள் பௌத்தர்களுடையது.
ஜனாதிபதி தேர்தலில் ஆகக் குறைந்தது 5 லட்சம் வாக்குகள் தமிழ் முஸ்லிம்களுடையது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
COMMENTS