உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை கிடைத்தவுடன், தாக்குதலுடன் தொடர்புடையோருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படுமென, நீதி அமைச்சர் அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், குற்றவாளிகளுக்கு எதிராக அரசாங்கம் தண்டனை வழங்கும் என தெரிவித்த அவர், ஆணைக்குழுவின் விசாரணை நடவடிக்கைகள் மிகவும் சுயாதீனமானமுறையில் இடம்பெறுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், இந்தச் சம்பவத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள் கட்டாயம் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
COMMENTS