இலங்கையில் கோவிட்19 னால் மரணமடைபவர்களை கட்டாய எரியூட்டல் உட்படுத்தப் படுகின்றன விடயம் குறித்து அவுஸ்திரேலியா சிட்னி சவுத் வேல்ஸ் மானிலத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவர்கள் ஒன்றிணைந்து 10-01-2021ம் திகதி நேற்று கண்டனப் போராட்டம் ஒன்றை நடத்தினர்.
அவுஸ்திரேலியா சிட்னி சவுத் வேல்ஸ் மானிலத்தில் வசிக்கும் இடம்பெயர்ந்த இலங்கை சமூகமாகிய நாம், கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் உடல்களை மத நம்பிக்கைகளுக்கு முரணாகவும் இலங்கை அரசியல் யாப்புக்கு நண்பனாகவும் செய்யப்படும் இந்த கட்டாய எரியூட்டல் ஒரு தனி மனித உரிமை மீறலாகும் உடல்களை தகனம் செய்யும் விதமாக இலங்கை அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் இணைந்து இருக்கிறோம் என்ற கோஷங்களுடன் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததை அவதானிக்கக்கூடியதாக இருந்தது இலங்கை என்பது பல மொழிகளையும் பேசக்கூடிய பல இன மக்கள் வாழுகின்ற ஒரு ஜனநாயக நாடு சர்வதேச சட்ட திட்டங்களுக்கும் மனித உரிமை சட்டங்களுக்கும் கட்டுப்பட்டு ஆட்சியில் ஈடுபடவேண்டிய நாடு உலக சுகாதார நிறுவனம் இந்த விடயத்தில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தெளிவான வழிகாட்டல்களை வழங்கியிருந்தும், ஏனைய நாடுகள் அவற்றை அனுசரித்து அதன்படி இறுதிக் கிரியைகளை மேற்கொள்ள அனுமதியளித்திருந்தும், சர்வதேச அங்கீகாரம் பெற்ற நுண்ணுயிர் துறை சார் நிபுணர்களின் கருத்துகளையும் ஏற்றுக் கொள்ள மறுப்பது ஏன் தெளிவான மனித உரிமை மீறல் மட்டுமல்லாது சர்வதேச சட்டத்துக்கு எதிரானதாகவும் இந்த செயல் பாட்டை அவதானிக்கக்கூடியதாக உள்ளது.
ஆகையினால் உலகம் முழுவதும் மனித உரிமைகள் மீறப்பட்டாலும் அதற்கெதிராகக் குரல் கொடுக்கின்ற ஒரு பெருமை மிக்க அவுஸ்திரேலியா நாட்டில் வாழும் குடிமக்களாக,
நமது நாடு
நமது உரிமை
நமது சமூகம்
என்ற கோட்பாட்டில்
ஆல்மா அசோஷியேஷன் அவுஸ்திரேலியா இவர்களின் ஏற்பாட்டில்
இலங்கை அரசின் அடக்குமுறை ஆட்சியை எதிர்த்து
நீதி நிலை நாட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து
அவுஸ்திரேலியா தலைநகரத்தில் இருந்து 20க்கும் மேற்பட்ட பிரதான நகரங்களை இணைத்து பல நூற்றுக் கணக்கான வாகன ஊர்வலத்துடன்
போராட்ட கோரிக்கையும் வைக்கப்பட்டது.
தகவல்
Ishrath Sathar
Sydney
COMMENTS