- பைஷல் இஸ்மாயில்
கடந்த சில நாட்களாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் மற்றும் அவருடன் இருக்கின்ற பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு, இன்று (12) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமுக்கு கொரோனா தொற்று இல்லை என பரிசோதனை பெறுபேறு கிடைத்துள்ளது.
நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த அன்டிஜன் பரிசோதனையில் நெகட்டிவ் என்ற பெறுபேறுகள் கிடைத்துள்ள போதிலும், பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உத்தியோகத்தர்கள் தங்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கொரோனா பாதிப்புக்குள்ளான ஏனைய சக பாராளுமன்ற உறுப்பினர்கள் விரைவில் குணமடைய தாம் பிரார்த்திப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் தெரிவித்துள்ளார்.
COMMENTS